கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் மட்டும் கொரோனா நோயில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேலாக உள்ளது. கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த மத்திய அரசுவிபல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கை அரசு எடுத்து வருகிறது. மாவட்டங்கள் வரியாக அதிகாரிகள் , தூய்மை பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள் கொண்டு அந்தந்த பகுதிகளுக்கு சென்று கிருமி நாசினி தெளித்து வருகின்றனர்.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி மருந்து தெளித்து வருகின்றனர்.
பேரூராட்சி சார்பில் இன்று (31-03-2020) முத்துப்பேட்டையில் உள்ள பிரதான சாலைகள், தெரு வீதிகள், மார்கெட் ,வழிபாட்டு தலங்கள் போன்ற இடங்களில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி மருந்து அடிக்கப்பட்டு வருகிறது.



