தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் நேற்று இரவு போலீசார் கல்லூரி மாணவரை தேவையில்லாமல் தாக்கியதால் அருகாமையில் நின்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஜியாவுதீன் அவர்கள் நியாயம் கேட்டபோது அவரையும் தாக்கியதால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
இதை தொடர்ந்து இன்று காலை சுமார் 11:30 மணியளவில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஜியாவுதீன் அவர்கள் நேற்று இரவு தாக்கப்பட்ட அருண்(19) கல்லூரியில் பயிலும் மாணவரை அழைத்துக்கொண்டு நியாயம் கேட்க அதிரை காவல் நிலையத்திற்கு வந்தார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்க கோரியும் மற்றும் நியாயம் கேட்டும் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வீடியோ இணைப்பு
இதைத்தொடர்ந்து தற்பொழுது போராட்டம் கைவிடப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.