நாளைய தினம் தீபாவளி பண்டிகை நாடெங்கிலும் கோலாகலமாக கொண்டாட தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில் அதிரை அருகே உள்ள உள்ளூர் புதுக்கோட்டையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறுவர்கள் அனைவரும் பட்டாசு வெடித்துள்ளனர்.
அதில் அப்பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு முடித்த சிறுவன் தினேஷ் குமாரும் நண்பர்களுடன் சேர்ந்து பட்டாசு வெடித்துள்ளார். அப்போது ஆபத்தை உணராத தினேஷ் குமார் பட்டாசை கையில் வைத்து வெடித்துள்ளார். இதனால் கையிலேயே அந்த பட்டாசு வெடித்ததால் அவருடைய இரண்டு விரல்கள் முழுவதுமாக சேதமடைந்துள்ளது. இரண்டு விரல்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் அவர் அதிரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்தினால் உள்ளூர் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் அதிரை அரசு மருத்துவமனையில் குவிந்துள்ளனர். இதனால் அதிரை அரசு மருத்துவமனை பரபரப்பாக காணப்படுகிறது.
பொதுமக்கள் அனைவரும் பட்டாசு வெடிக்கும்போது அதன் விபரீதத்தை அறிந்து மிக கவனமாகவும் பாதுகாப்பான முறையிலும் வெடிக்க வேண்டும். ஆபத்தான முறையில் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் விளைவுகளை உணர்ந்து பாதுகாப்பான முறையில் வெடித்தால் மட்டுமே இது போன்ற கோர விபத்துகளை தடுக்க இயலும்.