சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி,மல்லிப்பட்டிணத்தில் கொரோனா நிவாரண தொகை 1000 மற்றும் இலவச ரேசன் பொருட்கள் வினியோகம் துவங்கியது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களின் நலன் கருதி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயும், அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் ஆகிய பொருள்கள் விலையில்லாமலும் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
அதனடிப்படையில் வார்டு வாரியாக டோக்கன் வழங்கப்பட்டது, அதனடிப்படையில் டோக்கன் பெற்றோர் சமூக இடைவெளிவிட்டு வரிசையில் நின்று பெற்றுச் சென்றனர்.பணம் மற்றும் பொருள் விநியோகம் 15ம் தேதி வரை நடைபெறும் எனவும், ஆதலால் கூட்டத்தை தவிர்க்க டோக்கனில் உள்ள தேதியன்று ரேசன் கடைக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் தேர்வு துணை வட்டாட்சியர் யுவராஜ், மண்டல குழு தலைவர் ராஜ்குமார், கிராம நிர்வாக அலுவலர் தங்கமுத்து,ஊராட்சி மன்றத்தலைவர் முகமது அலி ஜின்னா,கிராம சுகாதர அதிகாரி மாலதி,வார்டு உறுப்பினர்கள் அகமது பாட்ஷா, நூருல் ஹமீத்,அபுபக்கர் மற்றும் முகமது ரபீக் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.






