கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசின் சார்பில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 1000 ரொக்கம், அரிசி, பருப்பு, சர்க்கரை வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று முதல் அதிரையில் உள்ள நியாய விலை கடைகளில் ரூ. 1000, அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
ரேஷன் கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் ஒரு நாளைக்கு 100 குடும்ப அட்டைகள் என்ற அளவில் வீடுகளுக்கே நேரில் சென்று டோக்கன் வழங்கி, அந்த டோக்கன் மூலம் குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் வந்து பெற்று கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.