ஷிஃபா மருத்துவமனையின் புனரமைப்புப் பணிக்குப் பங்குதாரர்களைச் சேர்க்கும் நோக்கத்தில், துபாயில் ஒரு கூட்டத்தை நமது அஹமது ஹாஜி அவர்கள் ஏற்பாடு செய்துள்ளார்கள். இந்த மருத்துவமனைத் திட்டத்தில் கலந்துகொள்ள ஆர்வம் உள்ளவர்கள் ஹாஜி அவர்களை உடனே தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து கொள்ளுங்கள்.
இதில் முக்கியமாகப் பங்குதாரர்களாக சேர விருப்பமுள்ளவர்களும் (குறைந்தபட்சம் ரூபாய் ஒரு லட்சம் முதலீடு செய்ய முடியும் என்பவர்கள்), மற்றும் இந்தத் திட்டத்திற்கு டெக்னிகளாக உதவி செய்யக்கூடிய டாக்டர், நர்ஸ், லேப் டெக்னீஷியன் போன்றவர்களும் கலந்து கொள்ளலாம்.
இதில் முதலீடு செய்யும் பணம் குறைந்தது மூன்று வருடங்கள் எங்களிடம் இருக்க வேண்டும், இந்த மூன்று வருடத்தில் லாபம் வந்தாலும் அது பிரித்துக் கொடுக்கப்பட மாட்டாது. அது மருத்துவமனையின் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தப்படும், இன்ஷா அல்லாஹ். அதற்குப் பிறகு உங்களுக்கு அவசியம் ஏற்பட்டால் அதை எடுத்துக் கொள்ளலாம், அப்பொழுதுள்ள லாப நஷ்ட கணக்கின்படி.
ஊரின் நலனில் அதிக அக்கறை கொண்டவர்களை நமது ஊரைப்போல் வேறு எந்த ஊரிலும் காண முடியாது என்றே சொல்லலாம். இதில் மருத்துவமனையை விட மிக முக்கியமானது நமது ஊருக்கு வேறு ஒன்றும் இருக்க முடியாது என்றும் சொல்லலாம். எனவே, இந்த அறிய வாய்ப்பைத் தவற விடாமல் இயன்றவர்கள் இதில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள். இது சம்பந்தமாக உங்களுக்கு எழும் சந்தேகங்களை நீங்கள் இந்த கூட்டத்தில் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
இதில் பங்கேற்பதால் நமக்கு ஈருலகிலும் நன்மை கிடைக்கும், இன்ஷா அல்லாஹ்.