தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் ஒருவார காலமாக பல இடங்களில் உள்ள வாய்க்கால்களில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றுவருகிறது.
இதேபோல் அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள வாய்க்காலில் உள்ள குப்பைகளையும், தேவையில்லா செடிகளையும் அகற்றும் பணி நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஆண்கள் பள்ளியை ஒட்டிய வாய்க்காலும் மற்றும் M.S.M நகர் பகுதியை ஒட்டிய வாய்க்காலும் சுத்தம் செய்யப்பட்டது.
ஆனால் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் அருகே தற்போது சுத்தம் செய்யப்பட்ட வாய்க்காலின் தொடர்ச்சியான கடற்கரைத் தெரு மைதானத்தை(ITI) ஒட்டிய வாய்க்காலை சுத்தம் செய்யாமல் விட்டுவிட்டதாக அம்மைதானத்தில் விளையாடும் விளையாட்டு வீரர்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே கடற்கரைத் தெரு மைதானத்திற்கு அருகில் ஓடும் வாய்க்காலையும் சுத்தம் செய்ய வேண்டுமென அங்கு விளையாடும் விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.