41
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் வடமாநிலத்தை சேர்ந்த கூலி தொழிலாளிகளுக்கு உணவு பொருட்கள் வழங்கி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் உதவி.
கொரோனா தொற்றின் காரணமாக கடந்த மார்ச் 22 ம் தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து நடைமுறையில் இருந்து வருகிறது.இந்நிலையில் கடந்த சிலநாட்களாக உணவின்றி தவித்த பீகார் மாநிலத்தை சேர்ந்த 37 கூலித்தொழிலாளிகளுக்கு 15 நாட்கள் தேவையான உணவுப்பொருட்களை பட்டுக்கோட்டை ஏரியா நிர்வாகிகள் வழங்கினர்.