அதிராம்பட்டினத்தில் தமிழக அரசு உத்தரவின் பேரில் 1000 ரூபாய் ரொக்கம் உள்ளிட்ட நிவாரண தொகுப்புகள் வழங்கும் பணி அந்தந்த பகுதிகளில் உள்ள நியாய விலைக்கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வந்தன.
குறிப்பாக ஒவ்வொரு அட்டைதாரர்களுக்கும் ஏற்ப அரிசி, சர்க்கரை,துவரம்பருப்பு உள்ளிட்ட தொகுப்புகள் வழங்கப்பட்டு வந்தன.
இதனால் ஏற்படும் காலதாமதத்தை கருத்தில் கொண்டு நாளை முதல் தொகையை மட்டும் வழங்குவதெனவும், பொருட்களை சகவாசமாக எப்போது வேண்டுமானாலும் இலவசமாக பெற்றுகொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் நாளை முதல் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கடை எண் 1 மற்றும் கடை எண் 3 ஆகிய கடைகளின் அட்டைதாரர்கள் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் பெற்றுகொள்ளலாம் என தெரிவிக்க பட்டுள்ளது.
தொகையை பெற்று கொள்ள வரும் அனைவரும் ரேசன் அட்டை கண்டிப்பாக எடுத்து வர வேண்டும் எனவும் முக கவசம் அணிந்து வருவது கட்டாயம் எனவும் தெரிவித்துள்ளனர்.
