அதிரைக்கு அழகு சேர்ப்பது என்னவோ நீர்நிலைகள் தான்.
இதன் காரனமாகவே அன்றைய அதிரையர்கள் குளங்களை பராமரிப்பதில் அதிக அக்கரை எடுத்துகொண்டனர்.
இதற்க்கு பின்னால் வந்த நம் தலைமுறையினர் அவ்வளவாக குளங்களை பராமரிப்பதில் அக்கரை காட்டியதாக தெரியவில்லை.
இதனாலேயே பல குளங்கள் கேட்பார் இன்றி சிதிலமடைந்து மாசு பட்டுள்ளன.
அந்த வரிசையில் முதலாம். இடத்தை பிடித்துள்ளது ஆனை விழுந்தான் குளம்,
இ
அதிரையில் நுழைவாயில் ஆலடி குளத்திற்கு அடுத்தபடியாக அழகு சேர்த்த குளம் அசிங்கப்பட்டு கூனி குருகி இருக்குறது.
அப்பகுதிவாசிகளின் குப்பை கிடங்காகவே மாறிவிட்ட இந்த பகுதியை பேரூராட்சி நிர்வாகமும் கண்டுகொள்ளாது, காரனம் மழவேனிர்காடு காடு சாலையில் அமைந்துள்ள குப்பை கிடங்கு நிரம்பியதாக தெரிகிறது, இதனாலேயே இப்பகுதியை அறிவிக்கபடாத குப்பை கிடங்காக அவ்வப்போது பேரூராட்சி பயன்படுத்தி கொள்கிறது.
அரசியல் சட்ட சாசன பிரகாரம் நீர்நிலைகளை பாதுக்காப்பது, பராமரிப்பது அரசின் கடமையாக உள்ளது எனவே சம்பந்தப்பட்ட அரசு நிர்வாகம் குளத்தை புணரமைத்து பாதுகாத்திட வேண்டும்.