முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான தமிழக அரசின் நீதி விசாரணை வரும் 25ந்தேதி தொடங்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்து கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார்.
அவரது மரணத்தில் மர்மம் உள்ளது என்று தற்போது வரை அனைவரிடத்திலும் உள்ளது.
இது குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, சென்னை எழிலகத்தில் விசாரணை கமிஷன் அலுவலகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று.இப்பணிகள் திங்களன்று முடிவடைய உள்ளது.
இதையடுத்து புதன்கிழமையன்று (25ந்தேதி) விசாரணைகள் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.