Home » அதிரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா(PFI) அமைப்பின் செயல்வீரர்களுக்கு தன்னார்வலர்கள் அடையாள அட்டை அரசு சார்பில் வழங்கல்…!

அதிரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா(PFI) அமைப்பின் செயல்வீரர்களுக்கு தன்னார்வலர்கள் அடையாள அட்டை அரசு சார்பில் வழங்கல்…!

by admin
0 comment

அதிராம்பட்டினத்தில் கொரோனா தொற்று தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் செயல்வீரர்களுக்கு பேரூராட்சியின் மூலம் தன்னார்வலர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழலில் தன்னார்வலர்கள் அரசோடு இணைந்து பணியாற்றலாம் என்று அறிவித்து இருந்தது, அதனடிப்படையில் தமிழகத்தில் மட்டும் சுமார் 10000க்கும் மேற்பட்ட PFI அமைப்பினர் பதிவு செய்து இருக்கிறார்கள்.இதில் அதிரையை சேர்ந்த 25 பேர் பதிவு செய்து இருந்தனர்.

அதனையடுத்து, பதிவு செய்திருந்த அனைவருக்கும் அரசின் அடையாள அட்டைகள் அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் பழனிவேலு வழங்கினார். அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் அன்பரசன், வழக்கறிஞர் முகமது தம்பி, அவ்வமைப்பின் அதிராம்பட்டினம் ஏரியா தலைவர் முகமது ஜாவித் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் அதிரை மக்களின் தேவைகளுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு எப்போதும் துணை நிற்கும் என்று கூறினர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter