Home » தஞ்சை கடற்கரை கிராம மீனவர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் திமுக மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ கோரிக்கை….!

தஞ்சை கடற்கரை கிராம மீனவர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் திமுக மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ கோரிக்கை….!

by admin
0 comment

தஞ்சை மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் தொடர்ந்து 82 நாட்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு தமிழக அரசு மீனவர்களுக்கு உரிய நிவாரணம் அளிக்க வேண்டுமென தஞ்சை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் விடுத்துள்ள கோரிக்கையில் தஞ்சை மாவட்ட கடற்கரை கிராம மீனவர்கள் கொரோனோ வைரஸ் தாக்கம் காரணமாக தமிழக அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவை ஏற்று மீன்பிடிக்க 2020 மார்ச் 25 முதல் ஏப்ரல் 14-ம் தேதி வரை 21 நாட்கள் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல இயலவில்லை.
இதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் ஆண்டுதோறும் மீன்கள் இனப்பெருக்க காலமான ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜீன் 15-ஆம் தேதி வரை 61 நாட்கள் மீன்படி தடைக்காலம் கடைப்பிடிக்கப்படுகிறது.

தொடர்ந்து 82 நாட்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல முடியாத நிலை நாட்டு படகு, விசைப் படகு மற்றும் இழுவை படகு மீனவர்களுக்கு ஏற்படுகிறது.

ஒட்டுமொத்த மீனவர்களும் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் இழக்கும் நிலை ஏற்படுகிறது.
மீனவ குடும்பங்களை காப்பாற்ற தமிழக அரசு உரிய நிவாரணம் மற்றும் மீன்படி தடைக்காலத்தை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க கோட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தஞ்சை தெற்கு மாவட்டக் கழக தி.மு.க செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter