Home » கோட்டையில் ஏற்றிய தேசிய கொடியில் ஓட்டை!

கோட்டையில் ஏற்றிய தேசிய கொடியில் ஓட்டை!

0 comment

சென்னை, கோட்டையில் பறந்த
தேசியக் கொடியில், ஓட்டை விழுந்ததைத்
தொடர்ந்து, அந்தக் கொடி
அகற்றப்பட்டு, புதிய கொடி ஏற்றப்பட்டது.
சென்னை, செயின்ட் ஜார்ஜ் கோட்டை
கொத்தளத்தில், மிகப்பெரிய
கொடிக்கம்பம் உள்ளது. இந்த
கொடிக் கம்பத்தில், தினமும் ராணுவ
வீரர்கள், காலையில், தேசியக் கொடியை
ஏற்றுவர்; மாலை இறக்குவர். வழக்கம் போல், நேற்று
(அக்.,20) காலை, தேசியக் கொடியை ஏற்றினர்.
காலை, 11:00 மணி அளவில், தேசியக்
கொடியின் பச்சை நிறத்தில், ஓட்டை இருப்பதை,
அவ்வழியே சென்றவர்கள் கண்டனர்.
இது குறித்து, அதிகாரிகளுக்கு தகவல்
தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து,
பிற்பகல், 2:15 மணிக்கு, ராணுவ வீரர்கள், ஓட்டை
விழுந்த தேசியக் கொடியை கீழே இறக்கி, புதிய
தேசியக் கொடியை பறக்க விட்டனர். பட்டாசு
நெருப்பு காரணமாக, கொடியில்
ஓட்டை விழுந்திருக்கலாம் என, கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter