பொருளாதாரம் தேடி அதிரையர்கள் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கு பறந்து செல்கின்றனர்.
அவர்களின் சிலர் அங்கேயே குடும்பம் குழந்தைகளை மறந்து தங்கள் வாழ்கையை அமைத்துக் கொள்கின்றனர்.
இவர்கள் கூட காலப்போக்கில் மரணத் தருவாயில் இல்லடத்தை தேடி வந்து விடுகின்றனர்.
ஆனால் அண்டை ஊரான சென்னையில் வியாபார நிமித்தம் தங்கியுள்ள ஏனைய பேர் மரணமடைந்த பிறகும் ஊர் செல்லாமல் அங்கயே அடக்கம் செய்யும் நிலை உருவாகிறது.
அது அவர்களின் விருப்பம் என்றாலும் சென்னையை பொருத்தவரை இறந்தவர் யார்? எந்த ஊரை சார்ந்தவர் என அந்த ஊரை சார்ந்த பதிவு செய்யப்பட்ட அமைப்புகள் மூலம் அடக்கம் செய்யப்பட உள்ள பள்ளிக்கு கடிதம் கொடுக்க வேண்டும். (அவ்வபோது மாநகராட்சி ஆய்வு செய்யும்) . (ஊர் எடுத்து செல்ல (NOC)வழிப்போக்கில் காவல்துறை விசாரித்தால் காண்பிக்க)
ஆனால் இதுவரை சென்னையில் மரணித்த அதிரையர்களுக்கு நமது ஊரை சார்ந்த அமைப்புகள்(?) கடிதம் கொடுத்துள்ளனவா? என்றால் இல்லை.
காரணம் நம்மிடையே பலமான அமைப்போ, தொண்டு நிருவனமோ இதுவரை இல்லை.
ஆதலால் தான் பிறக்கும் போது அதிரை அடக்கும் போது…. சென்னையில் உள்ள மற்ற ஊர்அமைப்புளிடம் கடிதம் வாங்கும் நிலை .
எனவே ஊர் நலனில அக்கறை காட்டும் நல்ல உள்ளங்கள் சென்னையில் ஒரு அமைப்பை உருவாக்கி இது போன்ற நல்லறம் செய்திட முனைய வேண்டும்.