182
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக அதிரையில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் அவசியமின்றி வெளியில் சுற்றித்திரிந்தவர்களின் வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்யும் நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளனர். அதன்படி 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மளிகை கடைகள் மதியம் 1 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என்பதை சுட்டிக்காட்டும் காவல் நிலைய அதிகாரிகள், அவசியமின்றி பொதுமக்கள் வெளியில் சுற்ற வேண்டாம் என எச்சரித்திருக்கிறார்கள். மருந்தகங்கள் மட்டுமே நாள் முழுவதும் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.