தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் தமிழகத்தில் அதிமுக அணி இரண்டாக உடைந்தது.
இதனை அடுத்து அதிமுக அம்மா அணியில் உள்ள சசிகலா உத்தரவின்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிர்வாக சீரமைப்பு பணிகளை செய்திட அதிமுக அம்மா அணியின் டிடிவி தினகரன் உத்தரவு பிறப்பித்தார் அதன் படி அந்தந்த மாவட்ட செயலாளர்கள் கிளை கழக நிர்வாக சீரமைப்புப் செய்து வருகின்றனர்.
அதன் படி நமதூர் அதிராம்பட்டினம் கிளை கழக செயலாளராக முஹம்மதுவும் , ஜமால் முஹம்மது பேரூர் மன்ற செயலாளராகவும் . பொருளாளராக ரபீக் ஆகியோரை அதிகாரப்பூர்வமாக நியமித்துள்ளதாக ஜெயா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.