தஞ்சாவூர் மாவட்டம்,சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் இன்று(ஏப் 11) தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி அடிக்கப்பட்டது.
கொரோனா தொற்றின் பரவலை அடுத்து சேதுபவாசத்திரம் ஒன்றியத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகளை ஊராட்சி பகுதிகளில் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். அதனடிப்படையில் ஒன்றியத்திற்குட்பட்ட சரபேந்திரராஜன்பட்டிணம் (மல்லிப்பட்டிணம்), புதுப்பட்டிணம், கொள்ளுக்காடு,ஊமத்தநாடு ஆகிய ஊராட்சிகளில் தீயணைப்பு வாகனத்தின் மூலம் பேருந்து நிலையங்கள்,மதவழிப்பாட்டு இடங்கள்,நியாய விலைக்கடைகள் ஆகிய பகுதிகளில் கிருமி நாசினிகள் அடிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் சேதுபவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் கி.முத்துமாணிக்கம்,PDO ரமேஷ்,DPDO கண்ணன்,இன்ஸ்பெக்டர் கண்ணன்,தீயணைப்புத் துறை நிலை அலுவலர் தங்கம், சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி மன்ற தலைவர் ஜலீலா ஜின்னா,வார்டு உறுப்பினர்கள் பக்கர்,ஃபாஜில் மற்றும் ஊராட்சி செயலாளர் தெட்சிணா மூர்த்தி இருந்தனர்.