கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக அரசு அலுவலர்கள், வணிகர்கள் மற்றும் மருத்துவர்களுடன் நெருக்கடி கால ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று சனிக்கிழமை தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் IAS தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக திட்ட அரங்கில் நடைபெற்றது.
அப்போது தஞ்சை மாவட்டத்தில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் விரிவாக விளக்கினார். அப்போது மேகன் என்ற சிறுவன், தான் சேர்த்து வைத்திருந்த ரூ. 3000 சேமிப்பு பணத்தை கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவிடம் வழங்கினார்.
இந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன், பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ், மாவட்ட திட்ட அலுவலர் பழனி, அரசு அலுவலர்கள், மருத்துவர்கள் மற்றும் வணிகர்கள் என பலர் கலந்துகொண்டனர்.


