திருந்தா ஜென்மங்கள்.
கடந்த வாரம் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் சுற்றுச் சூழல் மன்றம் சார்பாக. CMP லைனில் குப்பைத் தொட்டி கூண்டு வைக்கப்பட்டு.
முறையாக குப்பைகளை தொட்டியில் போட்டு ஒத்துழைப்பு தருமாறு சங்கம் சார்பாக முஹல்லா பள்ளி வாசல்களில் அறிவிப்பு செய்யப் பட்டது.
கூண்டு வைத்து 4 நாட்கள் ஆச்சரியப் படும் அளவிற்க்கு தூய்மையாக இருந்தது.
மீண்டும் பழைய குருடி கதவை திறடி என்ற நிலைமைதான்.
இதற்க்கு முன் சுகாதார முன்னேற்றக் கழகம் சார்பாக அதிரை பேரூராட்சி முன்னால் சேர்மன் S.H.அஸ்லம் அவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் சொந்த செலவுகளில் அதிரையில் பல பகுதியில் குப்பை கூண்டு வைத்தது . இதில் பல இயக்கங்கள் உட்பட குறிப்பிடத்தக்கது.
மக்களின் ஒத்துழைப்பின்மையால் காலப்போக்கில் கூண்டுகள் அகற்றப்பட்டது யாவரும் அறிந்ததே!
5000 ரூபாய்க்கு மேல் செலவு செய்து குப்பை கூண்டு வைப்பது அழகுபார்ப்பதற்க்கு அல்ல மாறாக சுகாதாரத்தை முன்னிருத்தி ஊர் மக்களின் நலனுக்காக என்பதையறிந்து முறையற்று குப்பையை கொட்டும் மனித குப்பைகள் புரிந்துக் கொள்ள வேண்டும்.
சம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் சுகாதார சுற்றுச் சூழல் மன்றமும் இணைந்து முறையாக குப்பைகளை கொட்டுவதைப் பற்றி வீட்டுக்கு வீடு சென்று விழிப்புணர்வு ஏற்ப்படுத்த வேண்டும்.
இப்படிக்கு.
L.M.S. அபுபக்கர்.