தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் கள்ளிவயல் தோட்டம் நாட்டுபடகு மீனவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் இன்று(ஏப் 12) வழங்கப்பட்டது.
கொரோனா தொற்றின் பரவலின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது, இதனால் பல்வேறு தொழில்கள் முடங்கி வாழ்வாதரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.இதில் மீனபிடி தொழிலும் அடங்கும்.
இந்நிலையில் மல்லிப்பட்டிணம் கள்ளிவயல்தோட்டம் நாட்டுபடகு மீனவர் சங்கம் சார்பில் சிரமத்திற்குள்ளாகும் மீனவர்களுக்கு பதினைந்து நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.மேலும் மீன்பிடி தொழிலுக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ள நிலையில் அரசு வகுத்து கொடுத்த நிபந்தனைகளை பின்பற்றிட சங்கத்தின் சார்பில் விழிப்புணர்வை மீனவர்களுக்கு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில பொதுச்செயலாளர் தாஜுதீன், கள்ளிவயல் தோட்டம் நாட்டுபடகு சங்க தலைவர் செய்யது முகமது,செயலாளர் அப்துல் ரகுமான்,பொருளாளர் ரஹ்மத்துல்லா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

