134
கொரோனா பரவல் அதிகரிக்கும் தமிழகத்தில் ஊரடங்கை இன்னும் நீட்டிக்க வேண்டும் என அனைத்து மக்களும் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், மல்லிப்பட்டினம் நகரில் அத்தியாவசிய கடைகளை தாண்டி பல கடைகளும் திறந்திருக்கின்றன.
இதனால் பொதுமக்கள் வழக்கம்போல வீதிகளில் நடமாடுகின்றனர்.
தமிழக அரசும், சுகாதாரத்துறையம் மக்களுக்கு அறிவுரைகள் பல வழங்கியும் அதனை பொருட்படுத்தாமல் வீதிகளில் சுற்றுவதாக காவல் துறையினர் வேதனை அடைகின்றனர்.
எனவே மல்லிப்பட்டினம் வாழ் பொதுமக்கள் ஊரடங்கை முழுமையாக கடைபிடித்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு நல்க வேண்டுகிறோம் என அரசு அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.