Home » கருப்பு திராட்சை விதைகளில் உள்ள மருத்துவ பயன்கள்!!

கருப்பு திராட்சை விதைகளில் உள்ள மருத்துவ பயன்கள்!!

0 comment

கருப்பு திராட்சை விதைகளில் புரோ ஆன்தோ சயனிடின் 80 உள்ளது. அதே போல் நாம் உண்ணுகின்ற மற்ற பழங்களிலும், காய்கறிகளிலும், தேநீரிலும் கூட இச்சத்து உள்ளது. சத்துக் கிடைக்கும் அளவு மிகமிகக் குறைவாகும். திராட்சை விதைகளின்  சத்தில் எவ்விதமான பக்கவிளைவுகளும் கிடையாது.

திராட்சை விதையில் உள்ள உட் கூறு ஒன்று புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை உடையது என்பதுடன், அந்த உட்கூறு நல்ல ஆரோக்கியமான செல்களுக்கு தீங்கு விளைவிப்பதில்லை என்று கண்டு பிடித்துள்ளார்.

உடலிலுள்ள வைட்டமின் சி, வைட்டமின்-இ பாதுகாப்பில் மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் இ சத்தை விட திராட்சை  விதை ஐம்பது விழுக்காடு அதிக சக்தி கொண்டது.

வைட்டமின்-சியை விட இருபது மடங்கு சக்தியுள்ளது. ரத்தக் கொதிப்பு நோய்க்கு அரு மருந்தாகப் பயன்படுகிறது. ரத்தக் குழாய்களில் அடைப்பு, ரத்தக் குழாய்களின் வீக்கம் ஆகியவற்றை திராட்சைப் பழவிதை குறைக்கிறது. ரண சிகிச்சையின்  காயத்தை விரைந்து ஆற்றுகிறது. மூலநோய் உள்ளவர்களின் ரத்தப் போக்கை துரிதமாகக் கட்டுப் படுத்துகிறது.

ரத்தக் குழாய்களில் உள்ள கொலஸ்டி ராலை கரைக்கிறது. சர்க்கரை நோயாளி களுக்கு காலில் மரத்துப்போகும் தன்மை, கண்  புரை வளருதல் ஆகியவற்றை தடுக்கிறது. கண் புரை வந்தாலும் நீக்குகிறது.

சிறுநீரகக் செயல்பாட்டின் குறைகளை சரி செய்யப் பயன்படுகிறது. மாலைக்கண் நோய் நீக்கி கண்களில் ஒளியைத் தருகிறது. பெண்களின் மார்பகப் புற்றுநோய், கருப்பை கோளாறுகள் நோய்களிலிருந்து தடுக்க வல்லதாக உள்ளது.

நினைவாற்றலை மேலும் வளர்க்கிறது. வயதான நாட்களில் ஆண்களுக்கு தொல்லை தரும் புராஸ்டேட் புற்று வராமல்  தடுக்கிறது. இவ்வளவு அருமை வாய்ந்த திராட்சை விதைகளை வீசியெறிந்து விட்டு வெறும் தசைகளை மட்டும் தின்று பயன்  ஏதும் இல்லை.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter