கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த மண்டல இயக்க மேலாண்மை குழு கூட்டம், மண்டல இயக்க மேலாண்மை கண்காணிப்பு அலுவலரும், தமிழக அரசின் அருங்காட்சியக ஆணையருமான எம்.எஸ். சண்முகம் ஐஏஎஸ் மற்றும் காவல்துறை தலைவர் எம்.சி. சாரங்கன் ஐபிஎஸ் தலைமையில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலக திட்ட அரங்கில் இன்று நடைபெற்றது.
இதில் தஞ்சை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் காவல்துறை துணை தலைவர் லோகநாதன் ஐபிஎஸ், தஞ்சை மாவட்ட ஆட்சியர் ம. கோவிந்த ராவ் ஐஏஎஸ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ். மகேந்திரன் ஐபிஎஸ், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ் ஐஏஎஸ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி மற்றும் பல்வேறு அரசுத்துறைகளின் அலுவலர்கள் பங்கேற்றனர்.


