Home » இத்தனை நாட்கள் முட்டாளாக இருந்துவிட்டோமே! அதிரைக்கு தேவை மருத்துவத்தில் தன்னிறைவு!

இத்தனை நாட்கள் முட்டாளாக இருந்துவிட்டோமே! அதிரைக்கு தேவை மருத்துவத்தில் தன்னிறைவு!

0 comment

வெளிநாட்டு வாழ்க்கை மோகம், குடும்ப பின்னணி என வாய்கிழிய பெருமை பேசியவர்களுக்கு செமட்டையாக அடி கொடுத்திருக்கிறது முதலாளித்துவ வைரசான கொரோனா. உள்ளூர் மருத்துவர்கள் சரியாக மருத்துவம் பார்க்கவில்லை, எனக்கு திருப்தி இல்லை, பக்கத்து வீட்டு மரியம் தஞ்சாவூரில் குழந்தை பெற்றாள், நானும் அங்கு தான் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என அடம்பிடித்தோர் இன்றைய சூழலில் அங்கு சென்று குழந்தையை பெற்றுக்கொள்ள முடியுமா?.

மத ரீதியிலான வெறுப்பு பிரச்சாரத்திற்கு மெத்தபடித்த மருத்துவர்களும் தங்கள் மூளையை கழற்றிவைத்துவிட்டு செயல்படும் சூழலில், அதிரை சுற்றுவட்டார கிராம மக்களை எப்படி குறை சொல்ல முடியும். அதிரையில் கோடி ரூபாய் முதலீட்டில் தனியார் மருத்துவமனை அமைக்கப்பட்டும் அதனை சாதாரண நாட்களில் பயன்படுத்தாத சந்தர்ப்பவாதிகள், தற்போது இக்கட்டான சூழலில் அந்த நிர்வாகத்தை வாய்க்குவந்தபடி வசைப்பாடுவது அறிவின்மையின் வெளிப்பாடு. எல்லைகள் அடைக்கப்பட்டு பக்கத்து கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டதால் அங்கிருந்து வர வேண்டிய செவிலியர்கள் பணிக்கு வர முடியாத சூழல் உள்ளது. குடும்பத்தினர் ஒத்துக்கொண்டாலும் கிராம பஞ்சாயத்து, அவர்களை பணிக்கு அனுப்ப தயாராக இல்லை.

முன்பு ஒரு காலத்தில் அதிரையில் மருத்துவர்கள் இல்லை என புலம்பினோம். ஆனால் தற்போது 10க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இருந்தும் செவிலியர்கள் இல்லாததால் மருத்துவர்கள் தங்கள் பணியை செய்ய முடியாத சூழல் நிலவுகிறது. இந்தநிலை மாற வேண்டும் என்றால் அதிரை மண்ணில் ஆண்/பெண் செவிலியர்கள் உருவாக வேண்டும். அதிரை மண்ணின் மகிமை உலகம் அறிந்ததே. ஆம், அதிரையர்கள் உருவாக்கிய எதுவும் குறிப்பிட்டவர்களுக்கானதாக இருந்தது இல்லை. அவை அனைத்து தரப்பினருக்குமானது. இத்தகைய நிலையில் விரைவில் மாற்றம் பிறக்கும் என்ற எதிர்பார்ப்புடன்….

-இக்லாஸ்

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter