Home » ஹட்சன் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு ?

ஹட்சன் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு ?

0 comment

தமிழகத்தின் முன்னணி பால் உற்பத்தி நிறுவனமான ஹட்சன் பால் உற்பத்தி நிறுவனம் தனது நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய 600க்கும் அதிகமான ஊழியர்களை அதிரடியாக நீக்கியுள்ளது.

ஆரோக்கியா பால், அருண் ஐஸ்கிரீம், ஹட்சன் நெய் உள்பட முன்னணி பால் பொருட்களை உற்பத்தி செய்யும் ஹட்சன் நிறுவனமானது தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து நாளொன்றுக்கு சுமார் 28 லட்சம் லிட்டர் பாலை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகிறது.

இந்நிறுவனச்த்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வந்தனர்.

இந்நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் பணிபுரிந்து வந்த 650க்கும் மேற்பட்ட ஊழியர்களை கடந்த 15 தினங்களில் அதிரடியாக நீக்கியுள்ளது .

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக மார்ச் மாதம் 23ந்தேதி முதல் ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர்க்கு மார்ச் 23ந்தேதி முதல் ஏப்ரல் 14 வரை சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கும்படி அரசு உத்தவிட்ட நிலையில் 144தடை உத்தரவு காரணமாக பஸ், ரயில் போக்குவரத்து இயங்காது போலீஸ் கெடுபிடிகள் காரணமாக ஓரிரு நாட்கள் , பணிக்கு செல்லாத 650 கற்கும் மேற்பட்ட ஊழியர்களை எந்தவித காரணமும் முன் அறிவிப்பும் இன்றி அதிரடியாக நீக்கியுள்ளது.

இதனால் இந்நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் கலக்கத்தில் உள்ளனர்

அரசு தடை உத்தரவு காலங்களில் தனியார் நிறுவனங்கள் ஊழியர்களை பணிக்கு வரும்படி கட்டாயப்படுத்த கூடாது எனவும் , பணிக்கு வராத ஊழியர்கள் மீது நடவடிக்கை எதுவும் கூடாது என மத்திய, மாநில அரசுகள் அறிவித்திருந்த போதிலும் அரசு உத்தரவை சிறிதும் பின்பற்றாது ஊழியர்களை சட்ட விரோதமாக ஹட்சன் நிறுவனம் நீக்கியுள்ளது.

தமிழகத்தில் கோடீஸ்வரர் வரிசையில் 5வது இடத்தில் உள்ள ஹட்சன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சந்திரமோகன் அவர்கள் தனது வளர்ச்சிக்காக பல ஆண்டுகளாக உழைத்த ஊழியர்களை விருப்ப பணி ஓய்வு பெறுவதாக எழுதி வாங்கிக் கொண்டு அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ள ஹட்சன் நிறுவனம் மீது தமிழக முதல்வர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் 144தடை காலங்களில் விடுமுறை எடுத்த ஊழியர்கள் மீது பணி நீக்க உத்தரவை பறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது பாதிக்கப்பட்ட ஊழியர்களின் குடும்பத்தினரது கோரிக்கையாக உள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter