தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் வெளியே செல்வதற்கான நீல நிற அட்டை பொதுமக்களுக்கு வீடு தேடி சென்று கொடுத்து வார்டு உறுப்பினர்கள் கொடுத்து வருகின்றனர்.
மாவட்டத்தில் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க இன்று(ஏப்ரல் 16) முதல் வாரத்திற்கு இரு நாட்களுக்கு மட்டுமே வெளியே வர அனுமதிக்கப்படும் வகையில் அதற்கான அடையாள அட்டையை மாவட்ட நிர்வாகம் வழங்கி இருக்கிறது.இதில் பச்சை வண்ண அட்டை வைத்திருப்போர் திங்கள் மற்றும் வியாழக் கிழமைகளில் கடைக்குச் சென்று வரலாம். நீலநிற அட்டை வைத்திருப்போர் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளிலும், பிங்க் நிற அட்டை வைத்திருப்போர் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும் அனுமதிக்கப்படுவார்கள். ஞாயிற்றுக்கிழமை யாருக்கும் அனுமதி இல்லை.
இதன்படி இந்த அட்டையை வார்டு வாரியாக அந்தந்த வார்டு உறுப்பினர்கள் கொடுத்து வருகின்றனர், மேலும் இந்த அட்டையின் மூலம் குடும்பத்தில் ஒருவர் மட்டுமே குறிப்பிட்டுள்ள நாட்களில் பொருட்கள் பெற வெளியே செல்ல வேண்டும் என்ற விதிமுறைகள் குறித்தும் விளக்கப்படுத்தினர்.

