தமிழகத்தில் டெங்கு பாதிப்பு என்பது கடந்தாண்டை விட இந்தாண்டு அதிகமான பாதிப்பாக இருக்கிறது.குறிப்பாக சொல்வதென்றால் நமதூரிலும் இந்த டெங்கு நோயின் பாதிப்பும் அதிகமாகவே காணப்பட்டது.டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு கடுமையான முயற்சிகளை சுகாதரத்துறை அமைச்சர்,சுகாதரச் செயலாளர் மேற்பார்வையில் முழுவீச்சாக நடைபெற்று வருகிறது.
இதனால் தமிழகம் முழுவதும் அரசு அதிகாரிகள் மூலம் டெங்கு பற்றியான விழிப்புணர்வும்,ஆய்வுப் பணிகளையும் தமிழக அரசு மேற்கொண்டுவருகிறது.
அதன் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களாக அதிரையில் அதிகாரிகள் வீடுவீடாக சென்று ஆய்வுகள் மேற்கொண்டும்,விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகின்றனர்.