உலகை அச்சுறுத்தி கொண்டுள்ள கொரோனா தொற்றால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தியாவில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது.
ஆனால் அதிரையில் சில இடங்களில் இந்த ஊரடங்கை மதிக்காமல் இளைஞர்கள் மைதானங்களில் விளையாடுவதாகவும்,பொதுமக்கள் மாலை நேரங்களில் சிலர் வீதிகளில் நடமாடுவதாகவும் காவல் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள அதிரை நகர காவல் எல்லைகளை கண்காணிக்க கேமிரா பொருத்தப்பட்ட ட்ரோன் வரவழைக்கப்பட்டு கண்கானித்து வருகின்றனர்.
எனவே பொதுமக்கள் காவல்துறையின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பை நல்கவும், பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையுடன் மட்டுமே வீதிகளுக்கு அத்தியாவசிய தேவைகளுக்கு செல்ல அதிராம்பட்டினம் காவல்துறை ஆய்வாளர் ஜெயமோகன் அறிவுறுத்தி உள்ளார்.
இந்த இடைக்கால சட்டத்தை மீறுவது சட்டப்படி குற்றம் எனவும், இவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக இரண்டாண்டுகள் வரை சிறைவாசம் அணுபவிக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.
எனவே பொதுமக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன், நீங்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்துகிறார்கள்.








வீடியோ :