Home » பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கொரோனா நிவாரண பணிகளின் விவரங்கள்..!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கொரோனா நிவாரண பணிகளின் விவரங்கள்..!

by
0 comment

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கொரோனா நிவாரண பணிகள்இந்தியா முழுவதும் மிக வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸின் காரணமாக பலதரப்பட்ட மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிக்கொண்டிருக்கும் சூழலில் அதிரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக செய்துவரும் மக்கள் நலப்பணிகள்

1. சட்ட பணிகள் மற்றும் மருத்துவ உதவிகள் :

அதிரையில் வாழும் மக்களுக்கு அத்யாவசிய பொருட்களை கொண்டுவருவதற்காக 50 க்கு மேற்பட்ட வாகனங்களுக்கு அனுமதி பெற்று கொடுக்கப்பட்டுள்ளது.
பட்டுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் போன்ற பகுதிகளிலிருந்து மருந்து பொருட்கள் வாங்கி 25க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

2. கொரோனா ஹெல்ப் லைன்

அதிரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஹெல்ப் லைன் வாயிலாக இதுவரை 2000 க்கு மேற்பட்ட நபர்களுக்கு சட்டம் சம்பந்தமான ஆலோசனைகள் மற்றும் கொரோனா குறித்து மக்களுக்கு தேவையான வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.

3.ஆஸ்ப்பிட்டல் அவசர உதவி

அதிரைவாழ் மக்களுக்கு இதுவரை 80 க்கு மேற்பட்ட நபர்களுக்கு மருத்துவம் சார்ந்த அவசர உதவிக்காக அரசு அதிகாரிகளை தொடர்புகொண்டு உதவிகள் செய்யப்பட்டுள்ளன..
அதிரையின் மருத்துவமனைகளுக்கு தேவையான அடிப்படை தேவைகளுக்கு தேவையான உதவிகள் செய்து கொடுக்கப்பட்டது.

4.கொரோனா விழிப்புணர்வு

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக அதிரை மார்கெட், கடை வீதிகள் மற்றும் வீடு வீடாக சென்று கொரோனா வைரஸிலிருந்து தங்களை எப்படி பாதுகாத்துக்கொள்ள வேண்டும் மற்றும் கொரோனா பரவலின் வீரியத்தை குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கப்பட்டுள்ளது.

5. அத்தியாவசிய உணவு பொருட்கள்

அதிரைவாழ் மக்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக 100 க்கு மேற்பட்ட தேவையுடைய ஏழை மக்களுக்கு உணவுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.

6.முஸ்லிம்கள் மீது அவதூறு பரப்பியவர்கள் மீது புகார்.

சமூக வலைத்தளங்களில் முஸ்லீம்கள் மீது அவதூறுகள் பரப்பப்பட்ட நபர்கள் மீது இணையதளம் வாயிலாக புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக நாடு முழுவதும் 144 சட்டம் அமுலில் உள்ளதால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி கொண்டிருக்கும் சூழலில் அனைத்து மக்களின் சிரமங்களை குறைக்கும் வகையில் அதிரையின் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவர்கள் மற்றும் செயல் வீரர்கள் 24 மணி நேரமும் மக்களுக்கான பணிகளை செய்துகொண்டு வருகின்றனர். இனியும் இதனை தொடர்ச்சியாக செய்வதற்கு தயார் நிலையில் உள்ளனர். நீங்கள் பாப்புலர் ஃப்ரண்ட் 24×7 என்ற ஹெல்ப் லைன்லில் எந்த நேரமும் கீழ் காணும் தொடர்பு எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.

அதிரை பாப்புலர் ஃப்ரண்ட் ஹெல்ப் லைன் 24×7 தொடர்பு எண்கள் :

1. A.ஹாஜா அலாவுதீன் – 97901 02710

2. Z.முகமது தம்பி – 96777 41737

3. A.J.அஜார் – 96008 09828

4. முஹம்மது ஜாவித் – 82205 98365

5. முஹம்மது ஆத்தீஃப் – 95667 47530

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter