தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் முழு அடைப்பிற்கு பொதுமக்களின் ஆதரவால் ஊர் முழுவதும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
தஞ்சை மாவட்டம் முழுவதும் இன்று(ஏப் 19) முழு ஊரடங்கு மாவட்ட நிர்வாகம் அறிவித்து இருந்தது, இந்த ஊரடங்கினால் யாரும் வெளியே வரக்கூடாது என்று உத்தரவையும் மீறினால் சட்டபடியான நடவடிக்கைகள் என்றும் உத்தரவு போடப்பட்டது.
இந்நிலையில் இந்த உத்தரவை மல்லிப்பட்டிணம் பொதுமக்கள் கடைபிடித்து யாரும் வெளியே வரவில்லை.இதன் காரணமாக கடற்கரை,பேருந்து நிலையம்,கடைத்தெரு,தெரு பகுதிகள் என ஊரின் அனைத்து பகுதிகளும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.மேலும் மக்களின் நடமாட்டத்தை காவல்துறை அதிகாரிகள் கண்காணித்து தீவிர ரோந்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என்ற உத்தரவை ஜமாஅத் நிர்வாகமும்,ஊராட்சியும் ஏற்கனவே அறிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












