தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு ரமலான் மாதத்தில் பள்ளிவாசலில்களில் நோன்பு கஞ்சி காய்ச்ச அனுமதி இல்லை என தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பானை வெளியிட்டிருந்தது.
இதனால் இந்த ஆண்டு ரமலானுக்கு பள்ளிவாசல்களில் நோன்புக்கஞ்சி காய்ச்ச முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் முறையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் நோன்புக்கஞ்சி காய்ச்ச அனுமதிக்க வேண்டும் என பல்வேறு ஊர்களைச் சார்ந்த ஜமாத் நிர்வாகிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் நோன்புக்கஞ்சி காய்ச்சி அரசு தரும் மானிய அரிசியை நிராகரிப்பது என முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து பட்டுக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலருக்கு மல்லிப்பட்டினம் முகைதீன் ஜுமுஆ பள்ளிவாசல் ஜமாஅத் சார்பில் எழுதப்பட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது :
ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் தமிழக அரசு நோன்பு கஞ்சி காய்ச்சுவதற்காக மானிய விலையில் தரப்படும் பச்சரிசியை இவ்வருடம் அரசாங்கம் பள்ளிவாசலில் நோன்பு கஞ்சி காய்ச்ச அனுமதி தராததால், நோன்பு கஞ்சிக்காக மானிய விலையில் வழங்கப்படும் பச்சரிசியை பள்ளிவாசல் நிர்வாகக் குழு எடுத்த முடிவின்படி இவ்வருடம்(2020) வேண்டாம் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.