வாட்ஸ்-அப்பில் வலம் வந்துக்கொண்டிருக்கிறது அந்த ஆடியோ. மதிய உணவை வீட்டில் சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு சென்றுக்கொண்டிருந்த 7ம் வகுப்பு மாணவனை பட்டபகலில் கடத்த முயற்சி செய்திருக்கிறார்கள் மர்ம நபர்கள். செய்திதாள்களில் மட்டுமே படித்துக் கொண்டிருந்த சம்பவம் இன்று நமதூரிலும் அரங்கேற ஆரம்பித்துவிட்டது. இதற்கு சாட்சியம் சொல்லுகிறது ரிபாத் என்னும் மாணவனுக்கு நிகழ்ந்த கொடூர அனுபவம்.
மாணவன் தப்பித்துவிட்டான் என அமைதியாக நகர்ந்து செல்ல முடியவில்லை. வாட்ஸ்-அப் பரவும் தகவல்களை கேட்கும் ஒவ்வொரு பெற்றோரின் மனதிலும் தனது செல்வங்களுக்கு என்னவாகும்? என்ற ஒருவித அச்சம் குடிக்கொள்ள துவங்கியுள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் இனிவரக்கூடிய நாட்களில் நிகழாமல் தடுக்க நாம் சில திட்டங்களை நமது பகுதி மக்களுடன் இணைந்து செயல்படுத்த வேண்டும். அதன் முதன்மையானதாக தெருக்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி காட்சிகள் பதிவை உறுதிப்படுத்திக்கொள்வது சிறந்தது
குழந்தைகளின் மனதில் குறைந்தது ஊர் பெயரையாவது தெளிவாக பதிவும் விதமாக கற்பிக்க வேண்டும்.
முன் அறிமுகம் இல்லாதவர்கள் அழைத்தால் செல்லக்கூடாது போன்ற எச்சரிக்கை உணர்வுகளை குழந்தைகளிடம் உருவாக்குவதன் மூலம் சிறப்பான பயனைபெறலாம்.
இதுபோன்ற பல வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் முடிந்தவரை நமது செல்வங்களை பாதுகாத்துக்கொள்ளலாம்…
மேலும் ஆலோசனைகளை அனுப்பி தாருங்கள்…
-முகம்மது சாலிஹ்
தொடர்புக்கு: 9500293649