சம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் 90-4 இணைந்து அதிரையில் பல்வேறு சமூக மற்றும் சுகாதர பணிகளை மேற்கொண்டு வருகின்றன.அதன்படி ஏற்கனவே அதிரையில் ஐந்து இடங்களில் சம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் 90-4 சார்பாக குப்பை சேகரிக்கும் கூண்டு வைக்கப்பட்டிருந்தது.அதன்தொடர்ச்சியாக இன்று(28.10.2017) காலை சுரைக்கா கொல்லை,மக்தும் பள்ளி எதிர்புறம்,AJ நகர்,பாவா மெடிக்கல் சந்து,SBI வங்கி அருகில்,மரைக்கா பள்ளி மையவாடி அருகில்,CMP லைன் ஆற்றுக் கரை பகுதி,காட்டுக்குளம் பகுதி,பழைய தனலெட்சுமி வங்கி அருகில்,தட்டார் தெரு எதிர்புறம் ஆகிய இடங்களில் குப்பை சேகரிக்கும் கூண்டு வைக்கப்பட்டது.
SISYA தலைவர் அஹமது அனஸ், செயலாளர் முஹம்மது சலீம், துணை தலைவர் மரைக்கா இத்ரீஸ், மற்றும் சுற்றுசூழல் மன்றம் 90.4 நிர்வாகிகள் வரிசை முஹம்மது, LIC ஓம் பிரகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டார்கள்.