தஞ்சாவூர் மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் மல்லிப்பட்டிணம் பேருந்து நிலையத்தில் இன்று(ஏப்.22) நடைபெற்றது.
கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்து வரும் வேளையில் சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் அதனை தடுக்கும் வண்ணம் அடிக்கடி கை கழுவுதல்,கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு முறைகள்,சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தராஜ்,துணை தாசில் தார்(தேர்தல் பிரிவு) யுவராஜ்,ராஜ்குமார்,ஊராட்சி மன்றத்தலைவர் ஜலீலா ஜின்னா,துணைத்தலைவர் மாசிலாமணி,வார்டு உறுப்பினர்கள் நூருல் ஹமீத்,அகமது பாட்ஷா மற்றும் ஊராட்சி செயலர் தெட்சினாமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.


