வரதட்சணைக்கு பயந்து கருவில் இருப்பது பெண் என்று தெரிந்தவுடன் அவர்களின் பெற்றோர்கள் கருவிலேயே பெண் குழந்தைதளை கொலை செய்தது ஒரு காலம்
பெண் குழந்தையை பெற்றெடுத்து அவள் வளர்ந்து பருவத்தை அடைந்த பின் முறையற்று ஆடவனோடு ஓடி விடுவாளோ என்று பயந்து பிறக்க போகும் குழந்தை பெண்ணாக இருந்து விட கூடாது என்று தவம் இருக்கும் பெற்றோர் பெருகி வருவதோ இக்காலம்
அந்தளவு முஸ்லிம் இளம் பெண்கள் ஒழுக்ககேடுகளையும் நம் சமுதாயத்திற்க்கு அவமானங்களையும் சர்வ சாதாரணமாக தேடி தருகின்றனர்
குறிப்பாக முஸ்லிம் இளம் பெண்கள் படிக்கும் போதே காதல் பெயரால் சீரழியும் செய்திகளும் இஸ்லாத்தை ஏற்காத ஆடவர்களோடு ஓடிச் சென்று திருமணம் செய்யும் அவலங்களும் அதன் பின் சில நாட்களிலேயே தற்கொலை செய்து இறக்கும் கோரமான சம்பவங்களும் தற்போது ஊடகங்களில் அன்றாட தகவலாகி வருகிறது
குறிப்பாக இஸ்லாத்தை தழுவாத நபர்களோடு முஸ்லிம் பெண்கள் ஓடிப்போகும் போதோ அல்லது அவர்கள் மூலம் பாதிக்கப்படும் போதோ உடனடியாக இது காவிகளின் சூழ்ச்சி என்று முஸ்லிம் பெண்கள் செய்யும் தவறுகளுக்கு முலாம் பூசி முஸ்லிம் பெண்களின் தவறுகளையும் அவர்களுடைய பெற்றோர்களின் முட்டாள் தனங்களையும் மூடி மறைப்பதையே சமுக பாதுகாப்பாக நம்மில் பலர்கள் கருதி வருகின்றனர்
குற்றவாளியை தண்டிப்பதை விட அந்த குற்றத்தை தூண்டி விடும் அம்சம் யாரிடம் அதிகம் காணப்படுகிறதோ அவர்கள் அந்த கட்டுப்பாடுகளை கடக்கும் போது அவர்களை கடுமையாக கண்டிப்பதும் சமுதாயத்திற்க்கு அடையாளம் காட்டுவதும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதும் தான் சமூக பணியாகும் மாற்றார் பார்வையில் நம் சமுதாயத்திற்க்கு நற்பெயரை பெற்று தரும்
ஒரு ஆண் பெண்ணை அடைய எதுபோன்ற சூழ்ச்சிகளை வேண்டுமானாலும் மறைந்தும் ஒளிந்தும் செய்வான் என்பது நூறு சதவிகம் உண்மை அதை மறுப்பதற்க்கு இல்லை
ஆனால் ஒரு ஆடவன் பெண்ணை மயக்கும் விசயத்தில் ஏமாற்றும் விசயத்தில் வெற்றி பெற்றாலும் அதற்க்கு பின்னனியில் அந்த பெண்ணிண் அறிவீன சாயலோ அல்லது சம்மதமோ இல்லாது ஒரு ஆண் வெற்றி பெற நிச்சயம் முடியாது
பெற்றோர் உற்றார் ஆசிரியர்கள் காதுகளில் பூ சுற்றி விட்டு ஒரு அந்நிய ஆடவனோடு மொபைல் மூலம் தொடர்பு வைத்து கொள்வதும் அவர்களின் தொடர்பு எண்களை போலியான பெண்களின் பெயரில் பதிவாக்கி வைத்திருப்பதும் மேலும் சமூக வளைதளங்கள் மூலம் யார் என்றே தெரியாதவர்களோடு நட்பு வைத்து கொள்வதும் ஆடவர்களின் லைக் மற்றும் பின்னூட்டங்களை வலிந்து ரசிப்பதும் கல்லூரிகளுக்கும் பாடசாலைகளுக்கும் செல்லும் வழிகளில் ஆடவர்களை வேண்டுமென்றே திரும்பி பார்க்க வைப்பது போல் தன்னை அலங்கரித்து செல்வதும் இன்றைய முஸ்லிம் இளம் பெண்களிடம் அதிகம் காணப்படுகிறது
தவறுகள் நடப்பதற்க்கு மூல காரணங்களை முட்டாள்தனமாக தன்னுள் ஏற்படுத்தி வைத்து கொண்டு பாதிப்புகளில் சிக்கி தவிக்கும் சூழலில் அவர்கள் தொடர்பில் வைத்திருந்த ஆடவர்களின் மீது மட்டும் பலி போட்டு தப்பிப்பது அழுது புலம்பி நாடகம் ஆடுவது இன்று முஸ்லிம் இளம் பெண்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் கை வந்த கலையாக மாறிவருகிறது
பிறப்பு முதல் திருமணம்
வரை பாதுகாப்பாகவும் பொக்கிசமாகவும் வளர்த்திய பெற்றோர்கள் தனது திருமணத்தில் தன்னை சவக்குழியில் தள்ளி விடுவார்களோ அல்லது நாம் பார்க்கும் ஆடவனை விட கீழ் நிலை உள்ள ஆடவனை திருமணம் செய்து வைத்து விடுவார்களோ என்ற நன்றி கெட்ட தன்மையும் குருட்டு நம்பிக்கையும் திரைப்படங்களில் சீரியல்களில் காட்டப்படும் போலியான காதல் காட்சிகளுக்கு அடிமைபட்டு இருப்பதும் ஒழுக்க கேடான காட்சிகளை அன்றாடம் பார்த்து ரசிப்பதும் தான் முஸ்லிம் இளம் பெண்கள் வழிகெட்டு போவதற்க்கு மூல காரணம்
இவைகளில் இருந்து விடுபடாமல் முஸ்லிம் இளம் பெண்களை அந்நியர்களின் காம தீக்கு இரையாகி கரியாகி போவதை ஒரு போதும் தடுக்க முடியாது
மோசமான விளைவுகளை பெண் பிள்ளைகள் சந்தித்த பின் அழுது ஒப்பாரி வைக்கும் இவர்களது பெற்றோர்களின் மடமைத்தனமே இதற்கெல்லாம் அச்சான காரணியாகும்
வளரும் சிறு பருவத்திலேயே நாணம் என்றால் என்ன ?
இறையச்சம் என்றால் என்ன ?
ஆண் பெண் உடலியல் ரீதியான உளவியல் ரீதியான இயற்கை தன்மைகள் என்ன ?
நரகம் என்றால் என்ன ?சொர்க்கம் என்றால் என்ன ?
சுயமரியாதையும் குடும்ப மானமும் சமுதாய கண்ணியமும் எந்தளவு முக்கியமானது?
என்பன போன்ற அடிப்படை அனுபவ பாடங்களையும் இஸ்லாமிய மார்க்க பாடங்களையும் கற்று கொடுக்கும் சிந்தனை அறவே இன்றைய இஸ்லாமிய பெற்றோர்களுக்கு இல்லை
முஸ்லிம் இளம் பெண்களுக்கு மேனியை மறைக்கும் பர்தா போடுவதை வலியுருத்தி சொல்லும் பெற்றோர்கள் அவர்களின் உள்ளத்திற்க்கு இறையச்சம் எனும் பர்தாவை போடுமாறு அவசியம் வலியுருத்த வேண்டும்
பெற்றோர்களை உற்றார்களை ஜமாத்துகளை உதறி தள்ளி விட்டு ஈமான் இழந்து ஓடி போகும் பெண்கள் மற்றும் முஸ்லிம் வாலிபர்கள் விசயத்திலும் அவர்களின் குடும்ப விசயத்திலும் எந்த ஜமாத்தும் கடுகளவு கூட அக்கரை செலுத்துவதை தவிர்க்க வேண்டும்
அனைத்து பள்ளிவாசல் அறிவிப்பு பலகைகளிலும் இதை பற்றிய எச்சரிக்கைகளை கண் படும் விதமாக தொங்க விட வேண்டும்
இதை பற்றிய சமூக விழிப்புணர்வு கூட்டங்களை அனைவரும் கேட்கும் இடம் தேர்வு செய்து மாதம் ஒரு முறையேனும் பொது கூட்டங்கள் நடத்த வேண்டும்
இதுவே தற்போது நம் சமுதாயத்திற்க்கு மிகவும் அவசியமானது
காவிகளை காரணமாக்கி நாம் மறுமையில் பாவிகளாகுவதை விட காரணங்களை கண்டறிந்து இருக்கும் குறைபாடுகளை கலைவோம் இன்ஷா அல்லாஹ்
عَنْ عَائِشَةَ ؓ قَالَتْ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ يَلِيْ مِنْ هذِهِ الْبَنَاتِ شَيْئًا، فَاَحْسَنَ اِلَيْهِنَّ كُنَّ لَهُ سِتْرًا مِنَ النَّارِ
எவர் தம் பெண் மக்களின் ஏதேனுமொரு காரியத்துக்குப் பொறுப் பேற்று, மேலும் அவர்களை நன்முறையில் பராமரித்தால் அவர்கள், அவரை நரக நெருப்பை விட்டும் தடுக்கும் திரையாகிவிடுவார்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
நூல் புகாரி
عَنْ اَيُّوْبَ بْنِ مُوْسَيؒ عَنْ اَبِيْهِ عَنْ جَدِّهِ 1 اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: مَا نَحَلَ وَالِدٌ وَلَدًا مِنْ نَحْلٍ اَفْضَلَ مِنَ اَدَبٍ حَسَنٍ
ஒரு தந்தை தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியையும், நல்ல ஒழுக்கத்தையும் விடச் சிறந்த அன்பளிப்பை வழங்கமுடியாது” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக தன் பாட்டனார் வாயிலாகத் தம் தந்தை கூறியதாக ஹஜ்ரத் அய்யூப் (ரஹ்) அறிவிக்கிறார்கள்
நூல் திர்மிதி
ஆக்கம்: நட்புடன் J . இம்தாதி