தஞ்சை மாவட்டம் செந்தலைப்பட்டினம் ஊராட்சியில் கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி ஆண்டி குளம் உள்ளது. செந்தலைப்பட்டினத்தின் முக்கிய குளங்களில் ஒன்றான இது, அசுத்தமான நீருடன் தூர்வாரப்படாமல் இருந்தது.
இந்நிலையில் அந்த குளத்தை தூர்வாரும் பணி துவங்கியுள்ளது. செந்தலை ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் ரஹ்மத்துல்லா, தனது சொந்த நிதியிலிருந்து ரூ. 1 லட்சத்தை ஆண்டி குளம் தூர்வாரும் பணிக்காக ஒதுக்கியுள்ளார்.
ஜேசிபி இயந்திரம் மூலம் தூர்வாரும் பணிகள் துவக்கப்பட்டு, பொதுமக்கள் குளிப்பதற்கு ஏதுவாக குளத்தின் தலைவாயிலில் படிகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
குளம் தூர்வாரப்படுவதால் எதிர்காலத்தில் தண்ணீரை சேமித்து வைக்கும் வாய்ப்பும் உருவாகியுள்ளது. குளத்தை தூர்வாருவதற்காக தனது சொந்த நிதியை ஒதுக்கிய ஊராட்சி மன்றத்தலைவர் ரஹ்மத்துல்லாவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.




