அல்லாஹ்வின் மாபெரும் கிருபையாலும் கடந்த பல வருடங்களாக நமது முஹல்லாவில் அறுக்கப்படும் குர்பாணி தோல்களை வசூல் செய்து அதன் மூலம் வரும் பணத்தைக்கொண்டும். குவைத்தில் பணிபுரியும் நமது முஹல்லா சகோதரர் பிச்சைகுட்டி பாவா பகுருதீன் அவர்கள் மாதந்தோறும் அனுப்பிதரும் தொகையும் சேர்த்து நமது முஹல்லாவில் உள்ள ஏழைகளுக்கு மாதந்தோறும் உதவி தொகை வழங்கிவருவைதை தாங்கள் அனைவரும் அறிவீர்கள் அதன் அடிப்படையில் இந்த வருடமும் முஹல்லாவசிகளின் ஏகோபித்த ஒத்துழைப்போடு, நமது முஹல்லா இளைஞர்களின் துடிப்பான செயல்பாடுகளினால் ஹஜ்பொருநாள் அன்று நமது மஹல்லாவாசிகளிடம் குர்பானி தோல்கள் வசூல் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ். அதனை விற்ற வகையில் கிடைத்த பணத்தைக் கொண்டு நமது மஹல்லாவில் உள்ள ஆதரவற்ற முதியோர், விதவைகள் ஆகியோருக்கு மாதந்தோறும் உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது..
அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுகே…
என்றும் அன்புடன்
அதிரை TIYA