அதிரையில் மண்டல மேற்பாவையாளர் சண்முகம் IAS அவர்களுடன் பாப்புலர் ஃப்ரண்டின் சட்ட உதவிகுழு சந்திப்பு !
அதிராம்பட்டினத்தில் இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தஞ்சை மண்டல கொரோனா தடுப்பு நடவடிக்கை குழு அலுவலரும், தமிழக அரசின் அருங்காட்சியக ஆணையருமான சண்முகம் IAS மேற்பார்வையிட்டார்கள்.
அது சமயம் பாப்புலர் ஃப்ரண்டின் சட்ட உதவி குழு பொறுப்பாளர் Z.முஹம்மது தம்பி, மண்டல மேற்பார்வையாளர் சண்முகம் IAS மற்றும் கண்காணிப்பு குழுவை சந்தித்து அதிரையின் சூழல்கள் குறித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது அதிரையில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் விஷயங்களில் உள்ள சிக்கல்கள் குறித்தும், மாளியக்காடு, மழவேனிற்காடு மற்றும் பட்டுக்கோட்டை பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள பரிசோதனை சாவடிகளில் சில
காவல் துறையினர் உரிய ஆவணங்கள் இருந்த போதும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக செல்லும் மக்களை தடுத்து நிறுத்துவது மட்டுமல்லாமல் கடுமையான வார்த்தைகளால் பேசுவது குறித்தும் பாப்புலர் ஃப்ரண்டின் சட்ட உதவி குழு பொறுப்பாளர் Z.முஹம்மது தம்பி புகார் தெரிவித்தார்.
மேலும் பட்டுக்கோட்டைக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக சென்ற அதிரையை சேர்ந்த ராக்கப்பன் என்பவர் அதிரையை சேர்ந்தவர் என்பதற்காக தாக்கப்பட்டது குறித்தும் புகார் செய்யப்பட்டது.
உரிய நடவடிக்கை எடுப்பதாக மண்டல மேற்பார்வையாளர் சண்முகம் IAS மற்றும் DSP சுப்பிரமணியன் ஆகியோர் கூறினர்.
மேலும் இந்த சந்திப்பின் போது அதிரையில் அனைத்து தடுப்பு பணிகளையும் பார்வையிட்ட சண்முகம் IAS, அதிரை மக்கள் அரசுக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவதாகவும், அனைத்து பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
மேலும் பாப்புலர் ஃப்ரண்டின் தன்னார்வலர்கள் குழுவின் பொறுப்பாளர்களை சந்தித்து அவர்களுடைய பணிகளை குறித்து கேட்டு அறிந்து கொண்டு பாராட்டு தெரிவித்தார்
இந்த சந்திப்பின் போது பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ் IAS, சுகாதார துறை இணை இயக்குனர், கோட்டாட்சியர், வட்டாட்சியர், பேரூராட்சி செயல் அலுவலர், துப்புரவு ஆய்வாளர் அன்பரசன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர், பணியாளர்கள் மற்றும் SDPI கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் A.Kசாகுல் ஹமீது ஆகியோர் உடனிருந்தனர்.


