144 தடை உத்தரவு காரணமாக கடந்த ஒருமாதமாக அதிரையில் உள்ள பள்ளிவாசல்களில் ஐவேளை தொழுகை நடைபெறவில்லை.
இந்நிலையில் அனைத்து பள்ளிவாசல்களிலும் ரமலான் மாத சிறப்பு தொழுகையும் நடைபெறாது என உலமாக்கள் அறிவித்துள்ளனர்.
இதனிடையே வாசகர்களின் கோரிக்கையை ஏற்று ஹைதர் அலி ஆலிம் அவர்களின் ரமலான் மாத சிறப்பு மார்க்க சொற்பொழிவை அதிரை எக்ஸ்பிரஸ் நேரலை செய்ய உள்ளது.
அதன்படி பிறை தென்பட்ட நாளிலிருந்து இந்திய நேரப்படி தினந்தோறும் இரவு 10.30 மணி முதல் நமது இணையத்தில் நேரலை செய்யப்படும்.