சீனாவில் பிறந்து இத்தாலியில் வளர்ந்து இந்தியாவில் குடி கொண்டிருக்கும் கொரோனா என்கிற கொடிய வைரஸ் ஒட்டு மொத்த உலகத்தையுல் உலுக்கி வருகிறது.
இந்த கொடிய வைரஸை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகள் ஊடரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் வைரஸ் கிருமிகளை கொன்று, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீரை அருந்த மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
இதனையடுத்து புதியதாக தேர்வு செய்யப்பட்ட அதிரை நகர தமுமுக நிர்வாகத்தின் சார்பில், தொடர்ந்து 5வது நாளாக பொதுமக்களுக்கு ஒவ்வொரு தெரு வாரியாகவும் கபசுர குடிநீர் கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.
அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் வலியுறுத்தலின்படி நேற்று புதுமனைத்தெரு, Cmp லைன் உள்ளிட்ட பகுதிகளுக்கு வீடு வீடாக சென்று கபசுர குடிநீர் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.





