தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர் சங்க அவசர ஆலோசனை கூட்டம் இன்று மதியம் 12மணியளவில் மாநில செயலாளர் A.தாஜுதீன் தலைமையிலும் மாவட்ட தலைவர் ஆ.இராசமாணிக்கம்,மாவட்ட செயலாளர் ஆ.வடுகநாதன்,மல்லிப்பட்டிணம் சங்க செயலாளர் ரெ.மணிகண்டன்,கள்ளிவயல் தோட்ட சங்க பொருளாளர் அ.இப்றாகிம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஐந்து முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
தீர்மானங்கள்
1.ஆழ்கடல் மீன்பிடி படகுகள் 70 விழுக்காடு மானியத்துடனும்,20% வங்கி கடன்,10% உரிமையாளர் பங்களிப்புடன் இழுவலை இழுக்கும் விசைப்படகு வழங்குவதாக கூறி மத்திய,மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.இதுபோன்ற தொழில்நுட்பம் கொண்ட விசைப்படகை கையாள தொழில்நுட்ப தெரிந்த மீனவர்கள் தஞ்சை மாவட்டத்தில் இல்லை,அதற்கான சூழலிம்,வளமும் இல்லை.ஆகவே மத்திய மாநில அரசுகள் இத்திட்டத்தை கைவிட்டு மீனவர்கள் விரும்பும் இழுவலை எடுத்து கொண்டு உரிய நிவாரணம் வழங்குமாறு இக்கூட்டம் மத்திய,மாநில அரசுகளை வலயுறுத்துகிறது.
2.விசைபடகு மீனவர்களுக்கு கம்பியில்லா தொலைத்தொடர்பு கருவி (VHF) பெற முன்பணம் ₹500ம் மீதி பணம் ₹7208 பணம் செலுத்தி அந்த கருவியை வாங்கி கொள்ளுமாறு மாநில அரசு தொடர்ந்து கட்டாயப்படுத்துகிறது.வாங்க மறுப்பவர்களுக்கு அரசின் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் நிறுத்தப்படும் என்று கூறுவது மனித உரிமை மீறலாகும்.ஆதலால் VHF கருவி வாங்க கட்டாயப்படுத்தாமல் மானிய விலையில் வழங்குமாறும் இக்கூட்டம் அரசை வலியுறுத்துகின்றது.
3.எந்த திட்டம் வந்தாலும் வாங்கி தான் ஆகவேண்டும் இல்லையென்றால் நலத்திட்ட உதவிகள் நிறுத்தப்படும் என்பது கண்டனத்திற்குரியது.மீனவர்களுக்கு வழங்கப்படும் நலத்தட்ட உதவிகள் என்பது நாங்கள் பிடித்துவரும் இறால், மீன்,நண்டு மூலம் கிடைக்கப்பெறும் அந்நிய செலவாணி தொகை மற்றும் மக்களுக்கு கிடைக்கின்ற புரத சத்து உணவிற்கு அரசு மானியம் வழங்குகிறது.இதை மிரட்டும தொனியில் கூறுவது மிகமிக கண்டணத்தை தெரிவிப்பதுடன் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் துறைரீதியான உயர் அதிகாரிகள் அடுத்தகட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
4.மல்லிப்பட்டிணம் கள்ளிவயல் தோட்ட பகுதியில் புதிய துறைமுக பகுதியில் சுற்றுசுவர் ஒன்று அமைய இருக்கிறது.அதற்கு அருகில் தனியார் இடங்கள் உள்ளன.அதன் அருகில் புதிய பயன்பாட்டு சாலை அமைத்து தரவேண்டும் என இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
5.மேற்கண்ட தீர்மானங்களை வலியுறுத்தியும்,நிறைவேற்றக்கோரியும் 30.10.2017முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என இக்கூட்டம் ஒருமனதாக முடிவு செய்கிறது.