தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மனிதநேய ஜனநாயக கட்சி கிளையின் அலுவலகம் திறப்பு மற்றும் கொடியேற்றும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு அதிராம்பட்டினம் செயலாளர் எம்.ஐ செல்லராஜா தலைமை வகித்தார். அக்கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ் ஹாரூன் ரஷிது சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தக்வாபள்ளி அருகே அமைந்துள்ள கட்சி கொடிக்கம்பத்தில் கொடியேற்றி வைத்தார்.பிறகு மஜக கிளை அலுவலகத்தை திறந்துவைத்து கிளை நிர்வாகிகளிடம் கட்சி வளர்ச்சி திட்டங்கள் பற்றியான கலந்துரையாடலை நிகழ்த்தினார்.
அக்கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் மதுக்கூர் கே. ராவூத்தர்ஷா, மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், மாவட்ட செயலாளர் அகமது கபீர், துணைச்செயலாளர் முகைதீன், அதிரை கிளை பொருளாளர் எச். சாகுல் ஹமீது, சமீர் அகமது, இப்ராஹீம் மஸ்தான், அபுபைதா மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக ஹாரூன் ரஷீத் அவர்கள் குவைத் மண்டல துணைச்செயலாளர் பைசல் அவர்களின் திருமணத்தில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.