கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடும் முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்கின்றனர்.
இந்நிலையில் புனித ரமலான் மாதம் துவங்க இருப்பதால், கூத்தாநல்லூர் பெரிய பள்ளிவாசல் நிர்வாக கமிட்டி சார்பில் கூத்தாநல்லூர் ஜமாத்தார்கள் ரமலானில் கடைபிடிக்க வேண்டிய அவசியமான நடைமுறைகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது :
◆ தராவீஹ் தொழுகையினை அவரவர்கள் வீட்டிலேயே தொழுது கொள்ள வேண்டும்
◆ ரமலான் நோன்பு கஞ்சி பள்ளிவாசலில் தயாரித்து வினியோகிப்பது இல்லை
◆பள்ளிவாசலில் சஹர் உணவு வழங்கப்படாது
◆பள்ளிவாசலில் நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி இல்லை
◆உணவு பொருட்களை வீட்டிலேயே தயாரித்து சுகாதாரம் அனுசரிக்க வேண்டும்
◆தனிப்பட்ட முறையில் கூட்டாக கஞ்சி காய்ச்சி விநியோகம் செய்வதையும், கூட்டாக தராவீஹ் தொழுவதையும், நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடத்துவதையும், சஹர் சாப்பாட்டிற்காக ஓன்று கூடுவதையும் ஊர் நலன் கருதி தவிர்த்திட வேண்டுகிறோம்>
மேற்கண்ட நடைமுறைகளை அனைவரும் கட்டாயமாக பின்பற்றி சமுதாய நலன் காத்து ஒத்துழைப்பு நல்கிட அன்புடன் கேட்டு கொள்கிறோம்.
இவ்வாறு கூத்தாநல்லூர் பெரிய பள்ளிவாசல் நிர்வாக கமிட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.