91
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கிய இரு நாட்களிலேயே கொட்டி தீர்த்து வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவம்பர் 3 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழையால் தஞ்சை மாவட்டம் அதிரம்பட்டினத்திலும் மழை பெய்து வருகிறது. அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டதுடன் காணப்பட்டது. பகல் 12 மணியளவில் பெய்ய ஆரம்பித்த மழையானது குளிர்ந்த காற்றுடன் தற்பொழுது வரை விடாமல் பெய்து வருகிறது.