மதுக்கூரில் இன்று காவல் ஆய்வாளர் செந்தில்குமாரை சந்தித்து மதுக்கூர் அனைத்து ஜமாஅத்தினர் ஆலோசனை நடத்தினர். அதில் காவல்துறை விடுத்த கோரிக்கையை முழுமையாக ஏற்றுக்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
கோரிக்கைகள்:
1. ஊரெடங்கு 144 தடை உத்தரவு அமலில் உள்ளவரை மதுக்கூரில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் நோன்பு கஞ்சி காய்ச்சுவதில்லை
2. பள்ளிவாசல்களிலோ அல்லது பொது இடங்களிலோ தடை உத்தரவு முடியும் வரை கூட்டாக தொழுகை நடத்துவதில்லை என்பன போன்ற தீர்மானம் பொதுமக்கள் மற்றும் மதநல்லிணக்கம், பொதுநலன் கருதி எடுக்கப்பட்டது.
காவல் நிலையத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மதுக்கூர் ஜாமியா மஸ்ஜித் தலைவர் TAKA முகைதீன் மரைக்காயர்,மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளை தலைவர் SM ஹாஜா முகைதீன், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மதுக்கூர் கிளைத் தலைவர் TMA அபுபக்கர் ஆகியோர் மற்றும் ஜமாத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



