தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடந்த சில மாதங்களாக தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் வீடுகளில் புகுந்து பணம், நகைகள், செல்லிடப்பேசிகளை திருடிச் செல்கின்றனர். மேலும், வீட்டு வாசலில் நிறுத்தியுள்ள பைக்குகளை திருடுவது, கடைகளின் பூட்டை உடைத்து பொருள்களை திருடிச் செல்வது என அதிகரிக்கும் திருட்டுச் சம்பவங்களால் வர்த்தகர்கள், பொதுமக்கள் கலக்கமடைந்துள்ளனர்.
இந்நிலையில் தவ்ஹீத் பள்ளி கிளை 1 அருகில் உள்ள ஹமீத் அவர்களின் வீட்டில் நேற்று இரவு வீட்டை பூட்டி சென்றனர். மீண்டும் மறுநாள் காலையில் வந்து பார்த்தால் தலைவாசல் கதவை உடைத்து சென்று அறையில் உள்ள பீரோல் கதவை உடைத்து 20,000 ஆயிரம் ரூபாயை திருடர்கள் கொள்ளையடித்துள்ளனர்.
அதிராம்பட்டினத்தில் நடக்கும் தொடர் திருட்டை தடுக்க காவல்துறையினர் இரவு நேரத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட வேண்டும். முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்க வேண்டும். இரவு நேரங்களில் நடமாடும் அறிமுகமில்லாத நபர்களை பிடித்து விசாரிக்க வேண்டும். மேலும், வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்லும் குடியிருப்புதாரர்களுக்கு தகுந்த பாதுகாப்பு தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.