நவம்பர் மாதம் நுகர்வோருக்கு விலை உயர்ந்ததாக இருக்கும். கச்சா எண்ணெய் வில உயர்வு மற்றும் உற்பத்திக்கத் தேவையான சில மூலப்பொருட்கள் விலை எல்லாம் உயர்வதால் ஏசி, குளிர் சாதன பெட்ட், வாஷிங் மெஷின், ஏசி, உணவுப் பொருட்கள், பெட்ரோல் போன்ற பொருட்கள் விலை உயர வாய்ப்புள்ளது.
எனவே எந்தப் பொருட்கள் எல்லாம் 2017 நவம்பர் மாதம் விலை உயர போகின்றது என்ற பட்டியலை இங்குப் பார்ப்போம்.
’
வீட்டு உபயோக பொருட்கள்
குளிர்சாதனப் பெட்டி, ஏசி மற்றும் சலவை இயந்திரங்கள் போன்ரவை நவம்பர் மாதம் 3 முதல் 5 சதவீதம் வரை விலை உயர வாய்ப்புள்ளது.
காரணம்
உள்ளிட்டுச் செலவு 30 சதவீதத்தில் இருந்து 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளதால் சந்தை ஜனவரி மாதம் முதல் பாதித்து வருகின்றது. ஸ்டேஇல் பொருட்கள் 40 சதவீதம் வரையிலும், காப்பர் 50 சதவீதம் வரையிலும் விலை உயர்ந்துள்ளது. மேலும் குளிர் சாதன பெட்டிகளில் பூசப்படும் முக்கிய ரசாயனமான எம்டிஐ தட்டுப்பட்டாலும் இந்த விலை உயர்வு நிகழ உள்ளது
விமான டிக்கெட்
கச்சா எண்ணை விலை சில மாதங்களாக 50 டாலருக்குக் குறைவாக இருந்து வந்தது. ஆனால் தற்போது 60 டாலர் வரை விலை உயர்ந்துள்ளதால் விமானங்களுக்கான எரிபொருள் விலையும் உயர்ந்துள்ளது.எனவே 10 முதல் 15 சதவீதம் வரை விமானக் கட்டணங்கள் விலை உயர் வாய்ப்புள்ளது.
ரூபாய் மதிப்பு
கச்சா எண்ணெய் விலை உயர்வால் அமெரிக்க டாலர் கொடுத்து வாங்க வேண்டும் என்பதால் ரூபாயின் மதிப்பும் அமெரிக்க டாலருக்கு எதிராகச் சரிந்து வருகின்றது.
ஹோட்டல் உணவு
இன்புட் கிரெடிட் கிளெய்ம்களைக் குறைக்காமல் மத்திய அரசு உணவகங்கள் மீதான ஜிஎஸ்டி-ஐ 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகக் குறைத்தால் உணவுப் பொருட்கள் மீதான விலை உயரும் என்று தேசிய உணவகங்களில் சங்கம் தெரிவித்துள்ளது. அரசும் ஜிஎஸ்டி-ஐ வரியைக் குறைக்க வாய்ப்புள்ளது. ஏசி உணவகங்களில் சாப்பிடும் போது 18 சதவீத ஜிஎஸ்டி வரி ஜூலை 1 முதல் விதிக்கப்பட்டு வருகின்றது.
உணவுகள் எவ்வளவு விலை உயரும்
ஜிஎஸ்டி வரியைக் குறைத்த பிறகு உள்ளிட்டு வரிக் கிரெட்டை குறைக்கவில்லை என்றால் உணவகங்களால் வரி தள்ளூபடிகளைப் பெற முடியாது, இதனால் உணவுகளின் விலை 7 முதல் 10 சதவீதம் வரை விலை உயரும்.
கச்சா எண்ணெய் விலை 82 விலை 60 டாலர் வரை உயர்ந்துள்ளதால் பெட்ரோல் விலை 7.8 ரூபாய் வரையிலும், டீசல் விலை 5.7 ரூபாய் வரையிலும் நவம்பர் மாதத்தில் விலை உயர வாய்ப்புள்ளது.”