நவம் 1:தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டிணம் ECR சாலைகளில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்காக சாலையில் இரு ஓரங்களிலும் கழிவுநீர் வடிகால் அமைத்துள்ளனர்.இதனை பொதுமக்கள் நடைபாதையாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.
அதிராம்பட்டினம் முத்தமாள் தெருவை ஒட்டிய ECR சாலையில் அமைந்துள்ள கழிவுநீர் வடிகால் நேற்றைய தினம் பெய்த மழையால் இடிந்து விழுந்தது அதற்கருகில் நின்று கொண்டிருந்த கோழிகள் மீது விழுந்து கோழிகள் இறந்தன.இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பாக காணப்பட்டது.இதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
சிலநாட்களுக்கு முன்னர் தான் கழிவுநீர் வடிகாலில் தேங்கி இருந்த குப்பைகளை பணியாளர்கள் அகற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.