டிச., 31க்குள், இந்திய பெருங்கடலில், மிகப்பெரிய சுனாமி அலைகள் உருவாகி, தமிழகம் மற்றும் கேரளாவில் அழிவை ஏற்படுத்த உள்ளதாக, கேரளாவைச் சேர்ந்த, பாபு கலயில் எச்சரித்து உள்ளார். இது குறித்து, பிரதமர் மோடிக்கு, அவர் கடிதம் எழுதி உள்ளார்.
கேரளாவைச் சேர்ந்தவர், பாபு கலயில். இவர், தனக்குரிய பிரத்யேக சக்தியின் மூலம், உலகில் நடக்கும் இயற்கை பேரிடர்கள், மாற்றங்களை முன்கூட்டியே அறிவதாக கூறுகிறார்.
2004ல், தாய்லாந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளில், பேரழிவை ஏற்படுத்திய சுனாமி அலைகள் குறித்து, முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தார்.
எனினும், அதற்கு முன், சுனாமி பாதிப்பு பற்றிய, போதிய புரிதல் இல்லாததால், இவரின் எச்சரிக்கையை யாரும் பெரிதாக கண்டு கொள்ள வில்லை.
சுனாமி மட்டுமின்றி, பல இடங்களில் ஏற்பட்ட நிலநடுக்கம் பற்றியும், முன்கூட்டியே தகவல் அளித்துஉள்ளார்.
திருவனந்தபுரத்தில், பி.கே.ரிசர்ச் அசோசியேஷனை நடத்தி வரும், கலயில், பூமியில் நடக்கும் மாற்றங் களையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் கூர்ந்து கவனிக்கிறார்.தனக்கு உள்ள, ‘எக்ஸ்ட்ரா சென்சரி பெர்சப்ஷன்’ எனப்படும், சிறப்பு சக்தி மூலம், வருங்காலத்தில் நடக்கவுள்ள இயற்கை சீற்றங்கள் குறித்து, முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கிறார்.
அந்த வகையில், டிச., 31க்குள், இந்திய பெருங் கடலில், அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட போவதாக எச்சரித்துள்ளார்.
இந்த நிலநடுக்கத்தால், கடலில் சுனாமி அலைகள் எழுந்து, தமிழகம் மற்றும் கேரளாவில், கடலோர மாவட்டங்களில் மிக பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும், பாபுகலயில் கூறியுள்ளார்.
கடலில் ஏற்படும் இந்த நிலநடுக்கத்தால், இந்தியா மட்டுமின்றி, சீனா, ஜப்பான், பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், தாய்லாந்து, இந்தோனேஷியா, ஆப்கானிஸ்தான், இலங்கை மற்றும் வளை குடா நாடுகளிலும், மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை உருவாக்கும் எனவும் எச்சரித்து உள்ளார்.டிசம்பர் 31க்குள் எந்த ஒரு நாளிலும் இந்த இயற்கை சீற்றம் நடக்க லாம் என்பதால், கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள், முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கூறி உள்ளார்.
இது தொடர்பாக, தகுந்த நடவடிக்கை மேற் கொள்ளும்படி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, செப்., 20ல், கடிதம் எழுதி உள்ளார்.
Source:
தினமலர்